

“இதோ அதிசீக்கிரமாக நான் வருகிறேன்” என்று இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார்.
லூக்கா 18:8 சொல்லுகிறது, ” ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே
விசுவாசத்தைக் காண்பாரோ? “
“நானே அவர்” [பிதாவாகிய தேவன்] என்று நீங்கள் “விசுவாசியாவிட்டால்” உங்கள் பாவங்களிலே சாவீர்கள்” என்று திருவுளம்பற்றின “இயேசு கிறிஸ்து தான் நம்முடைய பிதாவாகிய தேவன்” என்ற விசுவாசத்தை அவருடைய வருகையில் நம்மிடத்தில் காண விருப்பப்படுவார். யோவான் 8:24
அன்றைய யூதர்கள் அவர் “பிதாவைக் குறித்து தான் பேசினார்” என்பதை அறிந்துக்கொள்ளவில்லை (8:27)…
இயேசு தான் பிதாவாகிய தேவன் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்களுடைய இரட்சிப்பு பூரணமாகாது, இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் நீங்கள் கைவிடப்படலாம். ஜாக்கிரதை!
அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயர் 2:2 இல் பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய ஒரு தேவபக்திக்குரிய இரகசியம் உண்டு என்று சொல்லி, இந்த ஐசுவரியத்திற்க்குதான் உரியவர்களாகவேண்டுமென்று விருப்பப்பட்டார்.
அது மாத்திரமல்ல இந்த இரகசியத்திற்குரிய பதிலை அவரே வெளிப்படையாக தீமோத்தேயுவிற்கு சொல்லுகிறார்…
1 தீமோத்தேயு 3:16 ” அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது.
தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்,”
கவனியுங்கள்: “தேவக்குமாரன் அல்ல”, ஆனால் “பிதாவாகிய நம்முடைய ஒரே தேவனே” மாம்சத்தில் வெளிப்பட்டார்
இந்த வேதாகமம் முழுவதும் இந்த இரகசியத்தைக் குறித்து தான் உவமையாக எழுதப்பட்டிருக்கிறது. யோவான் 16:25
அறிந்துக்கொள்ளுங்கள்:
“நானே அவர்”, “இயேசுதான் பிதாவாகிய தேவன்” என்ற இந்த இரகசியத்தை அறிவதுதான் வேதாகமம் சொல்லுகிற “சத்தியம், சத்தியம், சத்தியம்”
இந்த விசுவாசத்திற்க்குதான் இயேசு கிறிஸ்து “சத்தியம்” என்று பெயரிட்டு…