ஒரே நிமிஷம்

இன்னும் ஒரே நிமிஷம்தான். அடுத்த நிமிஷம் உங்களுக்கு சொந்தமல்ல. ஏனென்றால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகை நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கிற அடுத்த நிமிஷத்திலேயே நிகழலாம். இயேசுகிறிஸ்து தம்முடைய வருகைக்கு முன்பாக அடையாளங்களாக நடக்கும் என்று சொன்ன அத்தனை சம்பவங்களும் இந்தக் காலத்தில்தான் முழுவதுமாக நிறைவேறி அவரது வருகை மிகமிக சமீபம் என்பதையும், அவர் வாசல் அருகே வந்துவிட்டார் என்பதையும் மிக ஆணித்தரமாக நமக்கு அறிவிக்கிறது.

ஆனாலும், இந்த கடைசிக் காலத்தில் நிறைவேற வேண்டிய ஒரு ஆவிக்குரிய அடையாளத்தை வேத வசனத்தின் அடிப்படையில் உங்களுக்கு வெளிப்படுத்த ஆசைப்படுகிறேன்.

 தானியேல் 5 ஆம் அதிகாரத்தை தியானியுங்கள். ராஜாவாகிய பெல்ஷாத்சார் தன் பிரபுக்களோடும், மனைவிகள், வைப்பாட்டிகளோடும் குடித்து வெறித்து அந்நிய தேவர்களை புகழ்ந்தான். அந்நேரத்தில் மனுஷ கைவிரல்கள் தோன்றி “மெனே மெனே தெக்கேல் உப்பார்சின்” என்ற வார்த்தைகளை சுவரில் எழுதியது. எழுதப்பட்ட அந்த எழுத்தையும், பாஷையையும் ஒருவரும் அறியமுடியாமல் இருந்தது. அப்பொழுது தானியேல் வரவழைக்கப்பட்டான். ஒருவரும் அறியமுடியாத அந்த பாஷையை தானியேல் வாசித்து அதற்கு அர்த்தம் சொன்னான். தானியேலுக்கும் அந்த பாஷை தெரியாது. ஆனால் அதை வாசித்து அர்த்தம் சொன்னான். இது அந்நியபாஷைக்கும், வியாக்கியானத்திற்கும் அடையாளம். அது ஒரு எச்சரிப்பின் செய்தி. அந்நியபாஷை, வியாக்கியானம் மூலம் வெளிப்பட்ட எச்சரிப்பு செய்தியின் அந்த ராத்திரியிலேயே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான்.

கல்தேயர் ராஜ்யம்தான் புறஜாதிகளின் முதலாம் ராஜ்யம். பெல்ஷாத்சார்தான் கடைசி ராஜா. உன் ராஜ்யத்திற்கு முடிவு உண்டானது என்று அந்நியபாஷை வியாக்கியானத்தோடு கொடுக்கப்பட்ட எச்சரிப்பின் செய்தியோடு முதலாம் புறஜாதிகளின் ராஜ்யம் முடிவடைந்தது. நாம் புறஜாதிகள். புறஜாதிகளாகிய நம்முடைய காலமும் அந்நியபாஷை வியாக்கியானத்தோடு எச்சரிப்பின் செய்தியோடு முடிவடையும் என்பதற்கு இது எவ்வளவு உறுதியான திருஷ்டாந்தமாக இருக்கிறது பாருங்கள். புறஜாதிகளின் முடிவுதான் இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகை.

மேலும் கடைசிக்கால ஊழியம் முழுவதும் எச்சரிப்பின் ஊழியமாகத்தான் இருக்கும் என்று வேதம் திட்டவட்டமாக எச்சரிக்கிறது. முதலாவதாக, முதல் உலக அழிவுக்கு முன் ஜனங்களை பேழையில் ஏற்ற நோவாவின் மூலம் முழுக்க முழுக்க ஏற்ற எச்சரிப்பு ஊழியம்தான் கொடுக்கப்பட்டது. இரண்டாவதாக இயேசுகிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்பதாக அவருக்கு வழியை ஆயத்தப்படுத்த யோவான் ஸ்நானகன் மூலமாக முழுவதும் எச்சரிப்பு ஊழியம் தான் கொடுக்கப்பட்டது.  மறந்துவிடாதீர்கள், எலியாவின் ஆவியை உடையவனாய் யோவான் ஸ்நானகன் இருந்தான் (லூக்கா 1:17). எலியா மூலம் எவ்வளவு பெரிய அற்புதங்கள் நடந்தன என்று யாவருக்கும் தெரியும். ஆனால் யோவான் ஸ்நானகனுக்குள் எலியாவின் ஆவி இருந்தும், ஒரு சிறிய அற்புதம் அடையாளம் கூட நடக்கவில்லை (யோ 10:41).  இது கடைசிக்காலத்தில் தம்முடைய பிள்ளைகள் வஞ்சிக்கப்படாமல் தங்களை காத்துக் கொள்ள கர்த்தர் கொடுக்கும் ஒரு பெரிய திருஷ்டாந்தம் என்று அறிந்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடைசிக்கால அற்புதங்களும் அடையாளங்கள் யாவையும் தம்முடைய திட்டத்தின்படி கள்ளக்கிறிஸ்துகளிடம் ஒப்புக்கொடுத்து விட்டார் என்பதை அறிந்துக்கொள்ளவேண்டும்.

‘ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.’ (மத் 24:2/24:24)

குறிப்பு:
“யார் கள்ளக்கிறிஸ்து?” என்ற கைப்பிரதியை கண்டிப்பாக வாசியுங்கள்.
(அதற்குரிய லிங்க் இந்த பக்கத்தில் கடைசியில் காணலாம்)

உலகில் மிக சமீபத்தில் நடக்கப்போகிற மாபெரும் அதிசயம்

உலகமெங்கும் திடீரென்று ஒருநாள் இலட்சக்கணக்கான மக்கள் ஒரு இமைப்பொழுதில் காணாமல் போகப்போகிற அதிசய சம்பவம் மிக சீக்கிரத்தில் நடக்கப்போகிறது. ஒரு வீட்டில் எல்லோரும் காணாமல் போகலாம். ஒரு வீட்டில் பிள்ளைகள் மட்டுமே காணாமல் போகலாம். ஒரு வீட்டில் பெற்றோர்கள் மட்டும், ஒரு வீட்டில் கணவன் அல்லது மனைவி காணாமல் போகலாம்.  இதுதான் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள எடுத்துக்கொள்ளப்-படுதலும், கைவிடப்படுதலுமாகும். (1 கொரி 15:51-52; 1 தெச 4:16-17). இதுதான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகை ஆகும்.

இயேசுகிறிஸ்து திருடனை போல வந்து தம்முடைய சுய இரத்தத்தால் மீட்டுக் கொண்ட உண்மையான மணவாட்டி சபையை மறுரூபப்படுத்தி ஆகாயத்தில் எடுத்துக்கொள்வதே இந்த நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்குப்பின் இந்த உலகம் முழுவதும் ஒரு பயங்கரமான திகில், கலக்கம், கொந்தளிப்பு உண்டாகும்.
என் மனைவியை காணோம்! என் புருஷனை காணோம்! என் பிள்ளைகளை காணோம்! என் அண்ணனை காணோம்! என் தம்பியை காணோம்! அக்காவை காணோம்! தங்கையை காணோம்! என்கிற அழுகுரல் பயங்கரமாக கேட்கும்.

இந்த சபை எடுத்துக் கொள்ளப்படுதல் சம்பவம் நடந்த மாத்திரத்திலேயே உலகமெங்கும் பயங்கரமான விபத்துகள் நடக்கும். எப்படியெனில் வாகனம் ஓட்டுனர்களில் அநேகர் இரட்சிக்கப் பட்டவர்களாய் இருப்பார்கள். இவர்கள் தங்கள் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே ஒரு இமைப்பொழுதில் எடுத்துக் கொள்ளப்படுவதால், வாகனங்கள் ஓட்டுனர் இல்லாதபடியால் தாறுமாறாக ஓடி ஒரு இமைப்பொழுதில் உலகமெங்கும் பயங்கர விபத்துகள் உண்டாகி, பெரும் உயிர்சேதமும் பொருள்சேதமும் உண்டாகும்.

இந்த அதிசயமான, ஆனால் அதே நேரத்தில் பயங்கரமான இந்த நிகழ்ச்சியைக் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பயத்துடன் நடுக்கத்துடன் பேசிக்கொள்வார்கள். கைவிடப்பட்ட மக்களில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இருப்பார்கள். இவர்கள் தங்கள் இரட்சிப்புக்கு இயேசுகிறிஸ்துவையும், அவருடைய வார்த்தையையும் விசுவாசியாதபடி தங்கள் சபைகளையும், தங்கள் சபை போதகர்களின் தவறான உபதேசத்தையும் விசுவாசித்தவர்கள். சுயநீதிக்காரர்கள், சன்மார்க்கர், தங்கள் சுயபுத்தியில் நம்பிக்கை வைத்தவர்கள்.

இவர்களில் அநேகர் புத்தியில்லாத கன்னிகைகளைப் போல உங்களை அறியேன் என்று கர்த்தரால் கைவிடப்பட்டவர்கள். கன்னிகைகள் என்றால் நல்லவர்கள், கெட்டுப்போகாதவர்கள் என்று அர்த்தம். ஆனால் புத்தியில்லாதவர்கள். அதுபோல கைவிடப்பட்ட மக்களில் அநேகர் தங்கள் வாழ்நாட்களில் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால் அநேக உண்மையான ஊழியக்காரர் மூலம் உண்மையான இரட்சிப்பின் சத்தியத்தை அறிந்திருந்தாலும், புத்தியில்லாமல் அந்த சத்தியத்தை அசட்டை பண்ணினவர்கள். இவர்கள் எல்லோரும் மகிமையான ஒரு ஆசீர்வாதத்தை இழந்துபோனோமே என்று அழுது அழுது புலம்புவார்கள். பித்தம் கொண்டவர்கள் போல் அரற்றுவார்கள். மார்பில் அடித்துக் கொள்வார்கள். பைத்தியம் பிடித்ததுபோல தரையில் உருண்டு உருண்டு புரளுவார்கள். சமாதானமே இல்லாமல் அலைக்கழிக்கப்படுவார்கள், ஏனென்றால் இழந்துபோனது ஒரு பாக்கியமான ஆசீர்வாதம் அல்லவா?

இந்த குழப்பமான, கொந்தளிப்பான சூழ்நிலையில்தான் அந்திக்கிறிஸ்து வெளிப்படுகிறான். இந்த அந்திக்கிறிஸ்து ஒரு மனிதனாகவும், ஒரு மத தலைவனாகவும் அதேநேரத்தில் சாத்தானின் முழு வல்லமையையும் பெற்றவனாகவும் இருப்பான். இவன் அசாதாரணமான காரியங்களை செய்து, இந்த பயங்கரமான சூழ்நிலையை மாற்றி, தற்காலிகமான சமாதானத்தை ஏற்படுத்துவான். ஆகாயத்தில் மணவாட்டி சபை எடுத்துக்கொள்ளபட்டதற்கு வேறு காரணம் காட்டி சத்தியத்தையே மறைத்துவிடுவான். இவன்தான் சமாதான பிரபு என்று நம்பி இவனுடைய கையில் எல்லோரும் தங்கள் ஆட்சியை ஒப்புக்கொடுப்பார்கள். உலகம் முழுவதும் உள்ள ஆட்சிகள் அந்திக்கிறிஸ்துவின் ஆதிக்கத்தின் கீழ்வரும். இவன் சர்வாதிகாரியாக உலகை ஆளத் தொடங்குவான். கைவிடப்பட்ட ஒருகூட்ட யூதர்கள் இவனை மேசியாவாக ஏற்றுக்கொள்வார்கள். இதுதான் இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பின் இந்த உலகில் நடக்கப்போகிற 7 வருட அந்திக்கிறிஸ்து ஆட்சியின் துவக்கம் ஆகும்.

இந்த ஏழு வருட காலம்தான் கைவிடப்பட்ட மக்களுக்கு குறிப்பாக புத்தியில்லாத கன்னிகைகளுக்கு மகா உபத்திரவமான காலமாக இருக்கும். அழுகையும், பற்கடிப்பும், கண்ணீரும், வேதனையும், புலம்பலும், பயமும் நடுக்கமும், திகிலும் நிறைந்த காலமாக இருக்கும். சஞ்சலத்தோடு, வருத்தத்தோடு கூக்குரலிடும் காலமாக இருக்கும். கற்பனை பண்ண முடியாத அக்கிரமங்கள் நடக்கும் உச்சக்கட்ட காலமாக இருக்கும்.  இதுவரை உலகம் கண்டிராத பயங்கரமான வேதனைகளை அனுபவிக்கும் காலமாக இருக்கும். உயிரை கையில் பிடித்துக்கொண்டு அடுத்த நிமிஷம் என்ன நடக்குமோ என்ற திகிலோடு எதிர்பார்த்து வாழும் காலமாக இருக்கும். தேவனுடைய கோபாக்கினை கலசம் கைவிடப்பட்ட மக்கள் மேல் கொடூரமாய் ஊற்றப்படும் காலமாக இருக்கும்.

அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது.
யார் நிலைநிற்கக்கூடும்
?  (வெளி 6:17)

கைவிடப்படுகிற மக்கள் அனுபவிக்கப் போகிற மகா கொடிய உபத்திரவங்கள்..

வெளி 6-16 அதிகாரங்கள் (சாராம்சம்)

 அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் சமாதானம் இருப்பது போல் முதலாவது காணப்பட்டாலும், உடனேயே தேவன் தம்முடைய கோபாக்கினையை கைவிடப்படுகிற மக்கள்மேல் ஊற்றத் தொடங்குகிறார். முதலாவது பூமியிலுள்ள சமாதானம் எடுத்துப் போடப்படும். கைவிடப்படுகிறவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்வார்கள். புருஷன் மனைவியை கொலை செய்வான். மனைவி புருஷனை கொலை செய்வாள். பிள்ளைகள் பெற்றோரை கொலை செய்வார்கள். பெற்றோர் பிள்ளைகளை கொலை செய்வார்கள். நண்பர்கள் நண்பர்களை கொலை செய்வார்கள். எந்த நேரத்தில் யார் கொலை செய்யப்படுவார்கள் என்பது தெரியாது.

சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள். பெற்றோருக்கு விரோதமாக பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைச் செய்வார்கள். (மத்தேயு 10:21)

வீடுகளிலும், தெருக்களிலும் தேசம் முழுவதுமே இரத்த ஆறு ஓடும். கை வேறு, கால் வேறு, தலை வேறு, குடல் வேறு என்று வெட்டப்பட்ட உடல் உறுப்புகளாய் ஊரெங்கும் தெருவெங்கும் சிதறிக்கிடக்கும்.

சகல ஜாதிகளின் மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும். அவைகளுடைய சகல சேனைகளின் மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது. அவர்களை சங்காரத்திற்கு நியமித்து கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார். அவர்களில் கொலை செய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டு கிடப்பார்கள். அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும். அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோகும் (ஏசாயா 34:2-3)

வெளி 6:4ல் சொல்லப்பட்டுள்ள சிகப்பு குதிரை இதற்கு அடையாளமாகும். இரத்த ஆறு ஓடும்.

இதன்பின் கொடுமையான பஞ்சம் உண்டாகும். பஞ்சத்தை சமாளிக்க அந்திக்கிறிஸ்து எடுக்கும் எல்லா முயற்சிகளையும் தேவன் நிர்மூலமாக்குவார். தாறுமாறான விலைவாசி உயர்வு உண்டாகும். மக்கள் வாங்கும் சக்தியை இழப்பார்கள். ஆகாரம் கிடைக்காமல் மக்கள் நாய்களையும், பூனைகளையும், எலிகளையும். கழுதைகளையும் சாப்பிட்டு அந்த இனமே இல்லாமல் போகும். ஒருவேளை ஆகாரத்திற்காக மக்கள் கொலை செய்யப்படுவார்கள். மனிதன், மனிதனையே சாப்பிடும் கொடூரமான காலம் உருவாகும் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறும்.

நான் அவர்களை தங்கள் குமாரரின் மாம்சத்தையும். தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன். அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் (எரேமியா 19:9)

வெளி 6:5ல் காணப்படும் கறுப்பு குதிரை பஞ்சத்தின் மூலமாக உண்டாகப்போகிற கொடும் வேதனையை குறிக்கிறது. காடுகளில் வசிக்கும் துஷ்டமிருகங்கள் தாராளமாய் ஊர்களில் நடமாட ஆரம்பிக்கும். இந்த மிருகங்கள் கண்ணில் கண்ட மக்களை எல்லாம் கடித்து குதறி ஜனங்களை சின்னாபின்னாமாக்கும். இதின் மூலம் இன்னும் நடுக்கம் உண்டாகும். ஜனங்கள் தெருக்களில் நடக்கவே பயப்படுவார்கள். இந்த கோபாக்கினையால் பூமியில் உள்ள மக்களில் கால் பகுதியினர் மாண்டு போவார்கள். (கிட்டத்திட்ட 210 கோடி மக்கள்) இந்த சாவினால் பூமியில் உள்ள கால்பங்கு மக்கள் மாண்டு போவார்கள் என்றால் தெருவெங்கும் வெட்டப்பட்ட பிரேதங்களாகத்தானே கிடக்கும், இந்த கோரக் காட்சியை சிறிது கற்பனை பண்ணி பாருங்கள் (வெளி 6:8).  இந்தப் பிணங்களை அடக்கம் செய்யமுடியாத சூழ்நிலை உருவாகும். ஆதலால் இந்த பிணங்கள் அழுகி, நாறி, தேச மெங்கும் பிணநாற்றம் உண்டாகும். இவைகள் பார்ப்பதற்கு கோரக்காட்சியாக இருக்கும். இவைகளால் ஏற்படும் சுகாதார குறைவினால் ஊரெங்கும் புதிது புதிதான கொள்ளை நோய்கள் தலைவிரித்தாடும். மாத்திரை மருந்துகளின் குணமாக்கும் தன்மையை தேவன் செயலிழக்கச் செய்வார். எந்த மாத்திரையையும் வேலை செய்யாது. ஆதலால் இந்த கொள்ளை நோய்களின் வேதனையை தாங்க முடியாதபடி ஜனங்கள் அழுது புலம்புவார்கள். கைவிடப்படுகிற மக்களில் ஒருவர் முகத்திலாவது சந்தோஷத்தையோ, சிரிப்பையோ பார்க்கவே முடியாது. ஐயோ! எவ்வளவு கொடுமை. இதுவும் அவ்வளவு கோரக்காட்சியாக இருக்கும்.

இதன்பின் உலகம் முழுவதும் பயங்கரமான பூமி அதிர்ச்சிகள் உண்டாகும். இந்த பூமி அதிர்ச்சிகளின் மூலமாக இலட்சக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகும். இடிந்துபோன வீடுகளை மறுபடியும் கட்ட சூழ்நிலையே இருக்காது. ஆதலால் வீடுகள் இல்லாதபடி தெருக்களிலும், காடுகளிலும், பயத்தோடு திகிலோடு வாழும்படியான பயங்கரமான சூழ்நிலை இலட்சக்கணக்கான மக்களுக்கு உண்டாகும். இன்று உல்லாசமாக, சுகபோகமாக மாளிகைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற கிறிஸ்தவ மக்களில் எத்தனைபேர்கள் இந்த உபத்திரவத்தை அனுபவித்து புலம்பப் போகிறார்களோ தெரியாது. இதை வாசித்துக் கொண்டிருக்கிற நீங்களும்கூட இதில் ஒருவராக இருக்கலாம். இந்த 2025ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த காட்டுத்தீ மூலம் எப்படி இலட்சக்கணக்கான மக்களும், குறிப்பாக மாடமாளிகைகளில் வாழ்ந்த ஹாலிவுட் நடிகர்களும், பெரும் செல்வந்தர்களும் வீடு வாசலை இழந்து தெருவுக்கு வந்தார்களோ, அதே போல நடக்கும். இது இயேசப்பா என் கரம் பிடித்து எழுதின வார்த்தைகள்.

அதுமட்டுமல்ல, கைவிடப்படுகிற சிறுவர்கள் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கும். மற்றும் இரத்தக்கொதிப்பு (BP), சர்க்கரை வியாதி (Diabetes), இருதயம் மற்றும் சரீர வியாதிகளோடு கைவிடப்படுகிற மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வேலை செய்யாதபடியால் வியாதியின் வேதனை தாங்க முடியாமல் புழுவாய் துடிப்பார்கள். இதன்பிறகு குதிரை உருவத்தில் பயங்கரமான வெட்டுக்கிளிகள் புறப்பட்டு விஷத்தேள்கள் போல் கொட்டும். தாங்கவே முடியாத இந்த கொடிய வேதனையில் என்ன செய்யலாம் என்று நினைப்பார்களாம் தெரியுமா? தாங்க முடியாமல் புழுவாய் துடித்து, இந்த பயங்கரமான வேதனைகளை சகிக்க முடியாமல், தற்கொலை பண்ணி செத்து போகலாம் என்று சாவைத் தேடுவார்களாம். ஆனால் வேதம் சொல்லுகிறது,

   “சாவோ அவர்களை விட்டு விலகி ஓடிப்போகும்” (வெளி 9:6)

எத்தனை ஆச்சரியம்! இது மனுஷனுடைய அறிவுக்கு எட்டாத விஷயம். இந்தக்காலத்தில் நினைத்த மாத்திரத்தில் தற்கொலை பண்ணிக்கொள்ள எத்தனையோ வழிகள் உண்டு. ஆனால் உபத்திரவக்காலத்தில் வேதனை தாங்காமல் சாகவேண்டும் என்று தற்கொலையை நோக்கி ஓடுவார்களாம், ஆனால் சாவோ அவர்களை விட்டு விலகி ஓடி போகுமாம். எவ்வளவு பயங்கரம்!  இந்த உபத்திரவங்களுக்கு முற்றுப்புள்ளியே இருக்காது. இந்த ஏழு வருட உபத்திரவ காலத்தில் வேதனை நின்று போனது என்று பெருமூச்சுவிட இடமே இருக்காது. ஏனென்றால் கடல் அலைகளை போல கைவிடப்படுகிற மக்களுக்கு உபத்திரவமும், வேதனையும் அடுக்கடுக்காக வந்துக் கொண்டே இருக்கும்.

இப்பொழுது தன்னுடைய கோபாக்கினையை இன்னும் அதிகமாய் கைவிடப்படுகிற மக்களுக்கு வெளிப்படுத்தும்படியாக, மகாபயங்கரமான வர்ணிக்க முடியாத வாதைகளை கர்த்தர் கட்டளையிடுகிறார்.

சூரியன் பூமியிலே அக்கினியை கொட்டும்படியாக கர்த்தர் வாதையை கட்டளையிடுகிறார், இந்த அக்கினி சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட ஏழு மடங்கு அக்கினி போல் இருக்கும். மயானத்தில் ஒரு பிரேதத்தை அக்கினியால் தகனிக்கும் போது எப்படி இருக்குமோ அப்படி  இருக்கும். இந்த சுட்டெரிக்கும் அக்கினியில் நீங்கள் சிக்கிக்கொள்ளாதபடி உங்களை காத்துக்கொள்ளுங்கள். உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இதைத் தொடர்ந்து பூமியின் நான்கு திசைகளுக்கும் நான்கு தூதர்களை அனுப்பி இயற்கை காற்றே வீசாதபடிக்கு காற்றை படைத்தவர் தடுத்து போடுகிறார். இன்று சிறிது காற்று வீச தவறினால் கூட எவ்வளவு வேதனைப்படுகிறோம். ஆனால் அக்கினியின் மத்தியில் மருந்துக்குக் கூட காற்று வீசாத சூழ்நிலை உண்டாகும் என்று சொன்னால் எப்படி வாழ முடியும் என்பதை சிந்தியுங்கள்? இந்த சூழ்நிலையில் மின்சாரம் இருக்காது. மின்விசிறி, ஏர்கன்டிஷன் வேலை செய்யாது. வேதனையோ வேதனை! புழுக்கத்தில் புழு மாதிரி துடிக்க வேண்டும்.

இதற்கு பின்பு உலகம் முழுவதும் இருக்கும் கடல்நீரை இரத்தமாக மாற்றுகிறார். இதினிமித்தம் மீன் இனம் முழுவதும் அழிந்து போவதால் பஞ்சமும், பசியும் வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். மனித மாமிசம் சாப்பிடுவது மிக மிக சாதாரணமாக காணப்படும். ரோட்டில் நடக்கிற எவரையும் பிடிப்பார்கள், வெட்டுவார்கள், சமைப்பார்கள். இதை வாசிக்கிற உங்களில் எத்தனை பேர் இந்த மனித மாமிசம் சாப்பிட போகிறீர்களோ என்று தெரியாது. அல்லது உங்கள் மாமிசம் எத்தனை பேருக்கு உணவாக மாற போகிறதோ அதுவும் எனக்கு தெரியாது. இது உண்மை! இது சத்தியம்!

இதைத்தொடர்ந்து, கடைசியாக உலகமெங்கும் குடிநீருக்காக ஆயத்தம் பண்ணி உள்ள ஆறுகளையும், குளங்களையும், ஏரிகளையும், கிணறுகளையும் கர்த்தர் இரத்தமாக மாற்றுகிறார். குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது. நமது ஊர்களில் உள்ள ஆறுகளும் குளங்களும் கிணறுகளும், இரத்தமாக மாறுவதை சிறிது கற்பனை செய்து பாருங்கள். இப்போது நமது வீடுகளில் உள்ள தண்ணீர் குழாயை திறந்தால் தண்ணீர் வருகிறது. ஆனால் இரத்தமாக வந்தால் எப்படி  இருக்கும்?

அவருடைய கோபத்திற்கு முன்னால் நிற்பவன் யார்?  (வெளி 6:17)

இந்த கடைசி கொடிய வாதைகள் நிமித்தம் உலகமெங்கும் பசி பசி என்ற சத்தமும், தாகம் தாகம் என்கிற பயங்கர அழுகுரலும் கேட்கும். இதினிமித்தம் கைவிடபடுகிற மக்கள், ஐஸ்வரியவான் பாதாளத்தில் எப்படி புழுவாய் துடித்தானோ, அதேப்போல புழுவாய் துடிப்பார்கள். இது உண்மை.

ஆதலால் கர்த்தருடைய பிள்ளைகள்  இருதயத்தை கடினப்படுத்தி, உண்மையான சத்தியத்தை அசட்டைப் பண்ணிவிடாதபடிக்கு அதிசீக்கிரம் மணவாளனாக வரப்போகிற இயேசுகிறிஸ்துவுடைய இரகசிய வருகைக்கு உங்களை மணவாட்டியாக  ஆயத்தப்படுத்துங்கள். ஏனெனில்..

உலகம் உண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவிக்காததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” என்று இயேசுகிறிஸ்துவே எச்சரித்து இருக்கிறார்  (மத்தேயு 24:21)

ஆம், இந்த 7 வருட உபத்திரவத்திலே கைவிடப்பட்டால் புழுவாய் துடிப்பதை தவிர வேறு வழியே கிடையாது என்பதை மறுபடியும் மறுபடியும் சொல்லுகிறேன். வேதனை தங்காமால் சாகவும் முடியாது. இது உண்மை.

கைவிடப்பட்டால்…

ஒருவேளை நீங்கள் உண்மையான சத்தியத்தை அசட்டைப்பண்ணி இந்த மகா உபத்திரவத்தில் புத்தியில்லாத கன்னிகைகளாய் கைவிடப்பட்டால் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்க கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஒரு வழியை சிறிது இரக்கமாக ஆயத்தம்பண்ணி இருக்கிறார்.

ஆனால் அது மிக மிக மிக மிக மிக மிக கடினமான வழியாகும். இரட்சிப்பின் சத்தியத்தை அறிந்தும் அதை துணிகரமாக அசட்டைப்பண்ணி நிர்விசாரமாய் இருந்து, புத்தியில்லாத கன்னிகைகளைப்போல கைவிடப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆத்துமாவிலும், சரீரத்திலும் இளைப்பாறுதல் இல்லாமல் அழுது அழுது புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்களானாலும் சரி, இந்த சம்பவம் இயேசுகிறிஸ்துவினால் நிகழ்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்ட மற்றவர்களானாலும் சரி, தாங்கள் இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையிலே கைவிடப்பட்டதை அறிந்து கொண்ட மாத்திரத்தில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை பரிபூரணமாக ஏற்றுக்கொண்டு, உபத்திரவ காலத்தின் வேதனைகளையும், கொடுமைகளையும் அனுபவிக்க தங்களை முற்றிலும் ஒப்புக்கொடுத்துவிட வேண்டும். மேலே எழுதப்பட்டுள்ள அத்தனை வாதைகளையும், கொடுமைகளையும் அனுபவிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். அதோடுகூட இயேசுகிறிஸ்துவிற்காக நீங்கள் உறுதியாய் நிற்க தீர்மானிக்கும் போது, அந்திக்கிறிஸ்து இன்னும் மூர்க்க வெறி கொண்டு உங்கள் மேல் இன்னும் கொடிய வேதனைகளை கொண்டு வருவான். அதையும் அனுபவிக்க நீங்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

இயேசுகிறிஸ்துவிற்காக உறுதியாய் நிற்கிற மக்களின் விசுவாசத்தை உடைக்கும்படியாக அவன் தன்னுடைய முத்திரையாகிய 666 என்ற எண்ணை ஜனங்கள் தங்கள் நெற்றியிலோ அல்லது வலது கையிலோ தரிக்கும்படி கட்டளை கொடுப்பான். உபத்திரவ காலத்தில் பஞ்சத்தால் ஏற்பட்ட தானியக்குறைவினால், இந்தமுத்திரை தரித்தவர்களுக்கு மட்டுமே இருக்கிற உணவுப்பொருட்கள் பகிர்ந்து கொடுக்கப்படும். இயேசுகிறிஸ்துவிற்காக உறுதியாய் நிற்கிற மக்களுக்கு எந்த உணவுப்பொருளும் கொடுக்கப்படமாட்டாது. ஆகையால் பசியாலும், பட்டினியாலும், தாகத்தாலும் வாடிவதங்கி ஒருவர் முகத்தை ஒருவர் வேதனையோடு பார்த்துக் கொண்டே நிமிஷங்களை கழிக்க வேண்டும். குடும்பமாக கைவிடப்படும்போது பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவரையொருவர் பசிக்கொடுமையினால் பார்த்துக்கொள்வது கோரக்காட்சியாக இருக்கும். பிள்ளைகளின் முகத்தை பார்த்து பெற்றோர்களின் இருதயம் உடைக்கப்படும். எந்த காரணத்தைக் கொண்டும் இந்த முத்திரையை மட்டும் தரித்துக்கொள்ளவே கூடாது. தரித்துக்கொண்ட மாத்திரத்தில்தானே உங்கள் இரட்சிப்பின் கடைசி வாய்ப்பையும் இழந்துபோவீர்கள்.

இன்னும் இயேசுகிறிஸ்துவிற்காக உறுதியாய் நிற்க தீர்மானிக்கும் போது வேதனை எல்லையை தாண்டும். மனைவியும், பெண் பிள்ளைகளும் கைவிடப்பட்டிருப்பார்களேயானால் உங்கள் கண்களுக்கு எதிரேயே உங்கள் மனைவிகளும், பிள்ளைகளும் பகிரங்கமாய் கொடுமையாய் கற்பழிக்கப்படுவார்கள். இயேசுகிறிஸ்துவிற்காக உறுதியாய் நிற்க தீர்மானிக்கிற பெண்களுக்கு உடுக்க ஆடை கிடைக்குமோ கிடைக்காதோ தெரியாது. கைவிடப்படுகிற பெண்களுக்கு இது மகா வேதனையான காலமாக இருக்கும். அவர்களுக்கு பாதுகாப்பே இருக்காது, அவர்கள் சின்னாபின்னமாக்கப்படுவார்கள். மணிப்பூரில் நடந்ததற்கு மேலாக நடக்கும். மேலும் இயேசுகிறிஸ்துவிற்காக நிற்க நீங்கள் தீர்மானிக்கும் போது, இன்னும் அந்திக்கிறிஸ்து ஆத்திரம் அடைந்து உங்கள் விரல்களை வெட்டுவான், கைகளை வெட்டுவான், கண்களைக் குத்துவான். இது சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்த காலமாய் இருக்கும்.

ஏனென்றால், உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும் (மத்தேயு 24:21)

என்று இயேசுவே சொல்லுகிறார் என்பதை மறுபடியும் நினைவுப்படுத்துகிறேன்.  

ஏற்கனவே கைவிடப்படுகிற மக்கள் அனுபவிக்க வேண்டிய உபத்திரவத்தையும், அதோடுகூட இயேசுகிறிஸ்துவிற்காக உறுதியாக நிற்க தீர்மானிக்கும்போது அனுபவிக்க வேண்டிய இந்த உபத்திரவத்தையும் அனுபவித்து, கடைசியாக சிரச்சேதம் பண்ண ஒப்புக்கொடுத்து இரத்த சாட்சியாய் மரித்தால் மட்டுமே தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்க முடியும். இதை இழந்துவிட்டால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய பரிசுத்தவான்களோடு இதே பூமியில் நடத்தபோகிற மகிமையான மாட்சிமையான ஆயிரம் வருட அரசாட்சியையும் இழந்து பரலோக வாழ்வையும் இழந்து என்றென்றைக்கும் அவியாத எரி நரகத்தில் தள்ளப்படுவீர்கள்.

நரகத்தை குறித்து வேதம் திட்டவட்டமாக போதிக்கிறது. இது மகா வேதனையுள்ள இடம். இது அழுது கூக்குரலிடுகிற இடம். முழு சரீரத்தோடு அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் தள்ளப்பட்டு, வெந்தும் வேகாமலும், உயிர் போயும் போகாமலும் அக்கினிக்குரிய அத்தனை வேதனைகளையும் அனுபவித்து புழுவைப் போல துடிதுடிக்கிற இடம். நெருப்பின் கொடுமையால் நாவு வறண்டு தண்ணீர், தண்ணீர் என்று கதறுகிற இடம். உலகில் உள்ள அத்தனை திருடர்களும், கொலைகாரரும், கொள்ளைக்காரரும், வேசிக்கள்ளரும், விபச்சாரக்காரரும், விக்கிரக வழிபாட்டுக்காரர்களும் மற்றும் அத்தனை துன்மார்க்கரும் கூடும் இடம். இந்த வேதனையின் மத்தியிலும் ஒருவருக்கொருவர் சண்டையிடும் இடம். எல்லாவற்றிற்கும் மேலாக உலகில் உள்ள அத்தனை கோடிக்கணக்கான பிசாசுகளும் அவனுடைய தூதர்களும் தள்ளப்படப்போகிற இடம். அப்படியானால் நரகம் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள்.

சகோதரனே, சகோதரியே, மறுபடியும் உங்களை கேட்கிறேன். இந்த மகா உபத்திரவம் உங்களுக்கு தேவையா? இந்த வேதனையும் பாடுகளும் உங்களுக்கு அவசியமா? ஒரு தீக்குச்சியின் வெப்பத்தையே தாங்கமுடியாத உங்களுக்கு முடிவே இல்லாத இந்த நித்திய நரக அக்கினியை சகிக்க முடியுமா? தயவு செய்து சிந்தியுங்கள். கிருபையின் காலமாகிய இந்த கடைசி காலத்தை மனமாறிய கள்ளன் போல் கடைசி நிமிடத்திலாகிலும் ஆதாயப்படுத்திக் கொண்டால் இந்த மகா பெரிய உபத்திரவத்திற்கும், எரிநரகத்திற்கும் உங்களை தப்புவித்துக் கொள்ளலாமே! சிந்திப்பீர்களா?

யார் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்?
யார் கைவிடப்படுவார்கள்?

இரகசிய வருகையில் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மணவாட்டி சபையை மட்டும் எடுத்துக்கொள்ள மணவாளனாக திருடனைப்போல வரப்போகிறார். அப்படியானால் நாம் மணவாட்டி என்ற முத்திரையை தரித்திருக்க வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கவேண்டும். மணவாட்டியாக அழைக்கப்பட வேண்டிய நமக்கு, ஒரே ஒரு புருஷன்தான் இருக்க முடியும் என்பதை மனதில் ஆழமாக வைத்துக் கொண்டு ஜெபத்துடன் வாசியுங்கள்.

1. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு.  (1 கொரி 8:6)

2. நம் எல்லோருக்கும் ஒரே பிதா இல்லையோ?  
ஒரே தேவன் நம்மை சிருஷ்டித்தது இல்லையோ?
(மல்கி 2:10)
என்று வேதம் சொல்லுகிறது.

“ஒரே தேவன்தான்” நமக்கு உண்டு.
அவர்தாம் நம்முடைய “பிதா”.

  ஆம்! இந்த பிதாவாகிய தேவன் சொல்கிறார்…

1. உன் சிருஷ்டிகரே (பிதாவே) உன் நாயகர் (புருஷன்)  (ஏசா 54:5)
(I am your Husband)

2. நான் உங்கள் நாயகர் (எரேமி 3:14, 31:3)
(I am married to You)

    நானே உங்கள் நாயகர், உங்கள் புருஷன் என்று பிதாவாகிய தேவன் சொன்னபின்பு வேறு ஒரு புருஷன் இருக்கவே முடியாது, முடியாது.

இப்போது கண்கள் திறக்கப்பட்ட பவுல் வெளிப்படுத்துகிற இரகசியத்தை வாசியுங்கள்…

நான் உங்களை கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால்… (2 கொரி 11:2)

‘கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு’
‘TO THE ONLY HUSBAND JESUS CHRIST’

மணவாட்டியாக போகிற நமக்கு ஒரே ஒரு பூருஷன்தான் உண்டு. அவர்தான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற மிகப்பெரிய இரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

காரணம் என்ன?

நானே உங்கள் நாயகர், புருஷன் (I am your Husband) என்று சொன்ன பிதாவாகிய தேவன் தான் மாம்சத்திலே தான் உரைத்த தீர்க்கதரிசனங்களின்படி குமாரனாக ஒரு சரீரத்தில் இயேசு என்ற மேலான நாமத்தில் வெளிப்பட்டுள்ளார் என்ற இரகசியத்தை இயேசப்பாவே அவன் கண்களை திறந்து அறியவைத்தார். (கலா 1:12)

இதுதான் தேவபக்திக்குரிய இரகசியம்..

அன்றியும் தேவ பக்திக்குறிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது.
(பிதாவாகிய) தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்.
(1 தீமோ 3:16)

The (FATHER) GOD was MANIFESTED IN FLESH.

ஆம், வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் உண்டாக்கின நம் ஒரே பிதாவாகிய தேவனே மாம்சத்தில் நமக்காக இரத்தம் சிந்தி நம்மை இரட்சிக்க குமாரனாக, ஒரு சரீரத்தில் வெளிப்பட்டார். (ஏசாயா 9:6)

இது மகா மேன்மையுள்ள இரகசியமாம்.  இதை எந்த தர்க்கமுமின்றி யாவரும் ஓப்புக்கொள்ள வேண்டுமாம். ‘Without controversy’ என்று ஆங்கில வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஏசாயா 9:6ன்படி ஆவியான ‘நித்திய பிதாவாகிய’ தேவன்தான் குமாரனாக வரவேண்டும் என்று அவரே சொல்லியுள்ள துல்லியமான தீர்க்கதரிசனத்தை நீங்கள் இன்னும் அறியாமல் இருக்கிறது என்ன?

அப்படியானால் இயேசுகிறிஸ்து மாம்சத்தில் குமாரனாக வெளிப்பட்ட நித்திய பிதா என்பதை உண்மையாக விசுவாசியுங்கள். இதுதான் விசுவாசத்தின் அஸ்திபாரம்.

மணவாட்டியாக எப்படி முத்தரிக்கப்படுகிறோம்?

ஏனெனில் உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனை பேரும்
கிறிஸ்துவை தரித்துக் கொண்டீர்களே
. (கலா 3:27)
   For as many of you as were baptized into Christ have put on Christ.  (Gal 3:27)

ஆம், கிறிஸ்து இயேசுவுக்குள்ளான இந்த ஞானஸ்நானத்தில் தான் நாம் மணவாளனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை நெற்றியில் தரித்து மணவாட்டியாக முத்தரிக்கப்படுகிறோம்.

(திருமதி. இயேசுகிறிஸ்து -வாக,
Mrs. Jesus Christ)

அப்படியானால், கிறிஸ்துவுக்குள்ளான ஞானஸ்நானம் என்பது எது?

சந்தேகமே இல்லாமல் பெந்தெகொஸ்தே நாளில் சபைகளுக்கு கொடுக்கப்பட்ட முதல் செய்திதான். பரலோகத்தின் திறவுகோலை பெற்ற பேதுருவுக்குள் இருந்து பரிசுத்த ஆவி மூலம் கர்த்தர் சொல்லுகிறார்.

நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். (அப் 2:38)

அன்றையத் தினமே 3000 பேர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப் 2:41). இவர்கள் யாவரும் யூதர்கள். பிதாவாகிய தேவன் யேகோவாவை ஆராதித்தவர்கள். அப்போஸ்தலர்களின் உபதேசம் மூலமாக இயேசு தான் தாங்கள் ஆராதிக்கிற பிதா என்று விசுவாசித்து தங்கள் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்கள். தயவு செய்து இந்த இரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள்.

இயேசுகிறிஸ்துவின் கட்டளையை பெற்றுக்கொண்ட அத்தனை அப்போஸ்தலர்களும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மட்டுமே ஞானஸ்நானம் கொடுத்தார்கள். (அப் 2:38, 8:15, 10:48, 19:5, ரோ 6:3, கலா 3:27).

இதற்கு வேதமும் சாட்சி, சரித்திரமும் சாட்சி.
இந்த சரித்திர சாட்சிகளை பின்பக்கத்தில் வாசியுங்கள்.

மேலும் அப்போஸ்தலர்கள் ஒருவர் கூட பிதா குமாரன் பரிசுத்த ஆவியை ஒரு நாமமாக உச்சரிக்கவே இல்லை. ஏனென்றால் ஒரே தேவன், ஆனால் மூன்று தனிப்பட்ட நபர்களாய் இருக்கிறார்கள் என்ற திரியேக விசுவாசமே அவர்களிடம் கிடையாது. இயேசுகிறிஸ்துஏக தேவன் (1 தீமோ 6:15) என்று விசுவாசித்து வார்த்தையினாலாவது  கிரியையினாலாவது எதைச்செய்தாலும் அதை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் செய்தார்கள். (கலா 3:17).

‘திரியேகம் என்ற வார்த்தையை உச்சரிக்கவே இல்லை.

இப்பொழுது இயேசுகிறிஸ்துவே வெளிப்படுத்திக் கொடுக்கிற மிகப் பெரிய இரகசியத்தை ஜெபத்துடன் வாசியுங்கள்.

எந்த கர்த்தர்..

பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்று கட்டளையிட்டாரோ,

அதே கர்த்தர்தான்..

    பெந்தெகொஸ்தே நாளில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்ற 3000 பேரை (அப் 2:41), இவர்கள் தான் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று முத்திரையிட்டு தன்னுடைய சபையில் சேர்த்துக் கொண்டார். (அப் 2:47)

மகிமை! உங்கள் கண்கள் திறக்கப்படுவதாக.
இந்த இரகசியத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.

இங்கு இயேசுகிறிஸ்துவே வெளிப்படுத்துகிற இரகசியம் என்ன?

  • ‘பிதா குமாரன் பரிசுத்த ஆவி’ என்பது என்னுடைய நாமம் (பெயர்) அல்ல, அது என்னுடைய பட்டப்பெயர்கள் (Titles)
  • அது 3 நபர்களோ அல்லது 3 தேவர்களோ அல்ல.
  • அது 3 தன்மைகளில் வெளிப்பட்ட என்னுடைய 3 தோற்றங்கள்.
  • நான் திரியேக தேவன் அல்ல, ஏகதேவன். (1 தீமோ 6:15)
  • நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியை பரப்பினவர் (மூவராய் அல்ல) (ஏசா 44:24)
  • நான் ஒருவராய் பெரிய அதிசயங்களை செய்கிற ஏக தேவன். (சங் 136:4)
  • நானே தேவன், வேறொருவரும் இல்லை, எனக்கு சமானமில்லை என்றவர். (ஏசா 46:9)
    இங்கு பிதாவாகிய தேவன் எனக்கு சமானமாய் ஒருவரும் இல்லை என்கிறார். ஆனால் திரியேகம்,.. “ஒரே தேவன் ஆனால் 3 தனிப்பட்ட நபர்களாய் ஒருவருக்கொருவர் சமமாய் இருக்கிறார்கள்” என்கிறது. எவ்வளவு பெரிய பொய் என்று பாருங்கள்
  • நான் நானே கர்த்தர், என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. (ஏசா 43:11) என்றவர்.
  • (ஏசா 45:22,23)ல் “முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும்” என்று பிதாவாகிய நான் சொன்ன தீர்க்கதரிசனத்தின்படி, நான் மாம்சத்தில் வெளிப்பட்டபோது வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படியான இயேசுகிறிஸ்து என்ற எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை” எனக்கென்று நானே தெரிந்து கொண்டேன். (பிலி 2:10)
  • இப்பொழுது “இயேசுகிறிஸ்து என்ற என்னுடைய இந்த மேலான நாமத்தைத் தவிர இரட்சிக்கப்பட வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே வேறொரு நாமம் கட்டளையிடப்படவே இல்லை.”  (அப் 4:14)
  • பரிசுத்த ஆவி என்பது என்னுடைய ஆவி. என்னை அப்பா பிதாவே என்று அழைக்க கொடுக்கப்பட்ட புத்திர சுவீகாரத்தின் ஆவி.  (ரோ 8:15)

இயேசுகிறிஸ்துவே இந்த மகிமையான வெளிப்பாட்டைக் கொடுத்து தன் சீஷர்களை பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைப் பெறவும், மணவாளனின் நாமத்தை தரிக்க கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க வைத்தார். சீஷர்கள் ஒருவரும் தவறு செய்யவில்லை. ஏனென்றால் அப்போஸ்தலர் உபதேசத்திற்கு இயேசு கிறிஸ்துவே மூலைக்கல் என்று வேதம் சொல்லுகிறது. (எபே 2:20)

இயேசு கிறிஸ்துவே இந்த மகிமையான வெளிப்பாட்டைக் கொடுத்தப் பின் யார் எதிர்த்து பேசமுடியும்?

அன்பு தேவ பிள்ளைகளே, இந்த ஞானஸ்நானத்தில்தான் நீங்கள் இயேசுகிறிஸ்துவின் மணவாட்டி என்ற முத்திரையை தரித்துக் கொள்கிறீர்கள். பிதா குமாரன் பரிசுத்த ஆவியைக் குறித்த இந்த இரகசியத்தை இயேசுகிறிஸ்துவே இவ்வளவு தெளிவாக வெளிப்படுத்தி கொடுத்த பின் நாம் தப்ப முடியாது. நான் இயேசுவின் கட்டளைக்குத்தான் கீழ்படிவேன் என்று அறியாமல் இனிமேலும் சாக்குபோக்கு சொல்ல முடியாது.

யோவான் 16:25ன் படி இயேசுகிறிஸ்து தான்தான் நித்திய பிதா என்று பகிரங்கமாக வெளிப்படுத்துகிற இந்த கடைசிக் காலத்திலே சாத்தானாலே மறைக்கப்பட்ட உண்மையான சத்தியங்களை எல்லாம் வெளிப்படுத்துகிறார். இனியும் காலம் தாமதிக்காமல் இந்த உண்மையான சத்தியத்தை விசுவாசித்து இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று மணவாட்டியாக முத்திரையிடப்பட்டு மணவாளனின் இரகசிய வருகைக்கு ஆயத்தமாகும்படி உங்களை மிகவும் அன்புடன் கேட்கிறேன், பலவந்தம் பண்ணுகிறேன்.

 ஏனெனில் பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதிலே பிரவேசிப்பார்கள்என்று வேதம் சொல்கிறது (மத் 11:12).

இதுவே கன்மலையின் மேல் கட்டப்பட வேண்டிய வீட்டிற்கு அஸ்திபாரம். இதை நாம் துணிகரமாக அசட்டைப்பண்ணினால்,..

   ‘பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்கு கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையை (உண்மையான சத்தியத்தை) தள்ளிவிட்டார்கள்.’ (லூக்கா 7:30)

ஆம், பெரியகேடு வரும். வரும் கோபத்திற்கு தப்ப முடியாது. இதுதான் வரும் கோபத்திற்கு தப்ப வழி (மத் 3:7).  நீங்கள் எவ்வளவு நல்லவர்களாய் இருந்தாலும், ஊழியர்களாய் இருந்தாலும் உங்களை அறியேன் அக்கிரமசெய்கைகாரரே என்று கடும் கோபத்தில் புத்தியில்லாத கன்னிகைகளைப் போல, அந்திக்கிறிஸ்துவின் ஏழு வருட உபத்திரவத்திலே உங்களை தள்ளிவிடுவார். புழுவை போல துடிக்க வேண்டும். கைவிடபட்டால் உபத்திரவகாலத்தில என்ன கொடூரமான வேதனைகளை அனுபவிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டிருப்பதை நினைவில் கொண்டு வாருங்கள். உங்களில் ஒருவருக்கும் இந்த வேதனை வந்துவிட வேண்டாம் என்று அன்பாக மன்றாடி கேட்கிறேன். உங்களை எப்படியாவது இயேசப்பாவின் வருகைக்கு ஆயத்தப்படுத்தி நோவாவின் பேழைக்குள் ஏற்ற வேண்டும் என்பதைத் தவிர எங்களுக்கு வேறு நோக்கமே இல்லை. இதுதான் இயேசப்பா அடிமைக்கு நேரடியாக கொடுத்த ஊழியம்.

நீங்கள் ஏற்கனவே ஒரு முழுக்கு ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும், நீங்கள் கண்டிப்பாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேறு முழுக்கு ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று உங்களை தைரியப்படுத்த வேதமே கொடுக்கும் சாட்சியை வாசியுங்கள்.

தயவு செய்து (அப் 19:1-6) வசனங்களை ஜெபத்துடன் வாசியுங்கள்

  • அப். பவுல் எபேசு தேசத்திற்கு வந்து சில சீஷர்களை சந்திக்கிறார்.
  • அவர்களிடம், நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றீர்களா என்று கேட்கிறான். அதைக் குறித்து கேள்விப்படவே இல்லை என்கிறார்கள்.
  • உடனே பவுல், அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்று கேட்கிறான். அதற்கு அவர்கள் நாங்கள் யோவான் ஸ்நானகன் கொடுத்த ஞானஸ்நானத்தை பெற்றிருக்கிறோம் என்றார்கள். இவர்கள் உண்மையாக மனந்திரும்பி ஒரு முழுக்கு ஞானஸ்நானம் பெற்றவர்கள்.
  • உடனே பவுல், இப்போது நீங்கள் இந்த புத்தகத்தில் வாசித்த சத்தியத்தின்படி தெளிவாக பிரசங்கம் பண்ணுகிறான்.
  • இதைக் கேட்டபோது, ஏற்கனவே உண்மையாக ஒரு முழுக்குஞானஸ்நானம் பெற்ற இவர்கள், தங்கள் பாவமன்னிப்புக்கென்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உண்மையான ஒரே முழுக்கு ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டார்கள்.
  • பூரண அபிஷேகத்தை பெற்றுக் கொண்டார்கள். மணவாட்டிகளாக முத்தரிக்கப்பட்டவர்கள். இதுதான் புத்தியுள்ள கன்னிகைகளுக்கு கொடுக்கப்பட்ட பூரண அபிஷேகம். புத்தியில்லாத கன்னிகைகள் இந்த சத்தியத்தை அசட்டை பண்ணினபடியால் திரு எரிகிறதுக்கு மட்டும் கொஞ்சம் எண்ணையாகிய பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த அபிஷேகம் அவர்களை காப்பாற்றவில்லை

மணவாட்டிக்கு ஒரே ஒரு புருஷன்தான் உண்டு என்பதை தயவு செய்து மறந்து விடாதீர்கள்.

குறிப்பு:
“யார் அந்த 5 புத்தியில்லாத கன்னிகைகள்?” என்ற கைப்பிரதியை கண்டிப்பாக வாசியுங்கள்.
(அதற்குரிய லிங்க் இந்த பக்கத்தில் கடைசியில் காணலாம்)

இன்று தமிழ்நாட்டில் இருந்து உலகமெங்கும் இருக்கிற சுவிசேஷகர்கள் கர்த்தர் கொடுத்த கட்டளைப்படி உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை அறிவித்து, நீங்கள் மனந்திரும்பி ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் மெய்யாகவே பிரவேசிக்க மாட்டீர்கள் என்ற கட்டளைப்படி ஞானஸ்நானத்தை குறித்து திட்டவட்டமாக பேசி, ஞானஸ்நானம் கொடுத்து ஜனங்களை இரட்சிப்புக்கும், வருகைக்கும் ஆயத்தம்பண்ண தைரியமில்லாத முதுகெலும்பு இல்லாத சுவிசேஷகர்களாய் இருக்கிறார்கள். சுவிசேஷர்களுக்கு கொடுக்கப்பட்ட மத்தேயு 28:19கட்டளையை துணிகரமாக அசட்டை பண்ணி எனக்கு எச்சரிப்பைக் குறித்தோ, ஞானஸ்நானத்தைக் குறித்தோ போதிக்க அழைப்பு கிடையாது என்று துணிகரமாக பொய் சொல்லுகிற இந்த முதுகெலும்பு இல்லாத சுவிசேஷகர்கள் பின்னால் சென்று உங்கள் ஆத்துமாவை இழந்து புத்தியில்லாத கன்னிகைகளைப்போல கைவிடப்பட்டு விடாதீர்கள் என்று அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஊழியர்களைப் பார்த்துதான் “உங்களை அறியேன், அக்கிரமச் செய்கைகாரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்” என்பார். (மத் 7:22,23) அப்போஸ்தலர்கள் சத்தியத்தை அறிவித்து திட்டவட்டமாக ஞானஸ்நானத்தைக் குறித்து பேசினபடியால்தான் அவர்கள் போன இடமெல்லாம் ஆயிரக்கணக்கில் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள், இரட்சிக்கப்பட்டார்கள். எழுப்புதல் உண்டானது.

இன்றைக்கு எழுப்புதல் எழுப்புதல் என்கிறார்கள் ஆனால் ஒரு எழுப்புதலையும் காண முடியவில்லை. காரணம் கர்த்தரின் கட்டளையை துணிகரமாய் அசட்டை பண்ணி கொண்டிருக்கிற உலகமெங்கும் இருக்கிற ஊழியக்காரர்களால்தான்.

அதுமட்டுமல்ல, ஐயோ மரித்துப்போன என் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, என் புருஷன், என் மனைவி இந்த ஞானஸ்நானம் பெறாமல் நரகத்திற்கு போயிருப்பார்களோ என்று பயந்து நடுங்கி மரித்தவர்களுக்காக, அவர்கள் இரட்சிப்புக்காக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அவர்கள் குடும்பத்தார் ஞானஸ்நானம் பெற்றார்களாம். (ஆனால் அறியாமையினாலே)
(1 கொரி 15:29)

அப்படியானால் உண்மையான ஞானஸ்நான சத்தியம் எவ்வளவு பயந்து நடுங்க வேண்டிய சத்தியம் பாருங்கள். ஆதலால்தான் சாத்தான் இந்த உண்மையான மகிமையான சத்தியத்தை மறைத்து பல குழப்பங்களை உண்டாக்கிவிட்டான்.

இப்படியிருக்க, குழந்தைகள் ஞானஸ்நானம் எப்படி செல்லுபடியாகும்?

  • முதலாம் உலக அழிவிற்க்கு முன் நோவாவின் பேழை ஞானஸ்நானத்துக்கு அடையாளம் (1 பேதுரு 3:20,21)
  • இயேசுகிறிஸ்துவின் முதல் வருகைக்கு ஞானஸ்நானத்தின் மூலம் அவருக்கு வழியை ஆயத்தப்படுத்த எச்சரிப்பு கொடுத்து, ஞானஸ்நானம் கொடுக்க யோவான் ஸ்நானகன் நியமிக்கப்பட்டான்.
  • அதே போல இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு முன் உண்மையான இந்த ஞானஸ்நான ஊழியம் பிரதானமான ஊழியமாய் இருக்கும்.

ஏனென்றால், இந்த உண்மையான ஞானஸ்நானம் தான் இயேசுகிறிஸ்துவோடு நாம் பண்ணும் நல் மனசாட்சியின் உடன்படிக்கையாகும்  (1 பேதுரு 3:21)

ஆதலால், அன்பு தேவ பிள்ளைகளே, இனியும் தாமதிக்க வேண்டாம். பாவ மன்னிப்புக்சகென்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று, மணவாட்டிகளாக, புத்தியுள்ள கன்னிகைகளாக முத்தரிக்கப்படாத அத்தனைபேரும், நீங்கள் இதற்குமுன் எந்த ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் மறுபடியும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று மணவாட்டிகளாக முத்தரிக்கப்பட வேண்டும் என்று வேதமே திட்டவட்டமாக உங்களுக்கு அழைப்பு கொடுக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

இது இயேசப்பாவே நீங்கள் அவருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற தாகத்தோடு, அன்பாக கொடுக்கிற அழைப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த நேரத்திலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க நாங்களும், எங்களைப் போன்ற ஊழியர்களும் ஆயத்தமாயிருக்கிறோம். உடனே தொடர்புக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை தம்முடைய இரகசிய வருகைக்கு ஆயத்தபடுத்துவாராக.

இதோ! நியாயாதிபதி இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார்.

உங்கள் பார்வைக்கு சில…

  • “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?” (யோ 14:9)
  • என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் (மத் 13:35) என்று இயேசப்பா சொன்ன வார்த்தையின்படி, யூதர்களுடைய கண்களை மறைத்து புறஜாதிகளாகிய நமக்கு இரட்சிப்பை ஆயத்தப்பண்ண, “பிதா குமாரன்” என்று உவமையாக பேசுகிறேன் (யோ 16:25) என்று இயேசப்பாவே சொல்லுகிறார். அதாவது, அனுப்பியவர் பிதா போலவும் தான் அனுப்பப்பட்ட குமாரன் போலவும் பேசுகிறார். தயவு செய்து இந்த இரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள். வேதம் முழுவதும் “பிதா குமாரன்” என்பது உவமையாகவே எழுதப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒரு காலம் வரும், அப்பொழுதுதான் பிதா யார் என்பதை குறித்து வெளிப்படையாக அறிவிப்பேன் என்று இயேசுவே சொல்கிறார் (யோ 16:25). அந்த காலம்தான் இந்த காலம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  • [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர்..] (1 யோ 5:7) என்று அடைப்புக் குறிக்குள் காணப்படும் இந்த வார்த்தை மூலப் பிரதி இல்லவே இல்லை. இது திரியேகத்தை நிரூபிக்க கிபி 16-ஆம் நூற்றாண்டில் துணிகரமாக சேர்க்கப்பட்ட வார்த்தை. இதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.                                                            .
    Google and search: “Johannine Comma”
  • பரலோகத்தில் ஒரே ஒரு சிங்காசனம்’ தான் (மூன்று அல்ல). அதில் ஒருவர் மாத்திரமே வீற்றிருந்தார்’ (மூவர் அல்ல) (வெளி 4:2)
  • அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், (மூவர் அல்ல) அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். (மூன்றாக அல்ல) (சகரி 14:9)
  • இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். (ரோ 9:5)
    ஆமென் என்று முத்திரையிடப்பட்டபின் அவருக்கு மேலான ஒரு தேவன் இருக்க முடியுமா? இருக்கவே முடியாது!
  • (இயேசுகிறிஸ்துவாகிய) நானே அவர் (பிதாவாகியதேவன்) என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள். (நானே அவர் என்பது) பிதாவைக்குறித்துப் பேசினாரென்று. அவர்கள் அறியாதிருந்தார்கள். (யோ 8:24,27)
  • இந்த உண்மையான சத்தியம் வெளிப்படாத காலத்தை ‘அறியாமையுள்ள காலம்’ (அப் 17:30) என்று இயேசப்பா முத்தரித்திருக்கிறார். இந்த அறியாமையுள்ளக் காலத்தில் யார் யார் உண்மையாக, பரிசுத்தமாய் வாழ்ந்து, எந்த ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் அவர்கள் பரலோகத்தில் இருப்பார்கள். ஆனால் இப்பொழுதோ, இந்த உண்மையான சத்தியம் அறியப்பட்டு அறிவிக்கப்படுகிற காலத்தில், “இந்த உண்மையான சத்தியத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் என்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். (அப் 17:30)
  • இயேசு கிறிஸ்து யார் என்ற மகிமையான வெளிப்பாடு இல்லாமல், வேதத்தின் வெளிச்சத்தை அறியாமல் இந்த உண்மையான சத்தியத்தை போதிக்கிறவர்களை ‘ONLY JESUS’ என்றும், இயேசு நாமக்காரர்கள் என்றும், (ஒன்லி ஜீசுஸ்) என்று துணிகரமாக பரியாசம் பண்ணுகிற யாவருடைய மனக்கண்களும் திறக்கப்படுவதாக. இல்லாவிட்டால் பெரிய ஆபத்துகாத்திருக்கிறது.

சரித்திர சாட்சிகள்

கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை ஆதி சபைகள் இயேசுகிறிஸ்து தான் பிதா என்று விசுவாசித்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மட்டுமே ஞானஸ்நானம் கொடுத்தார்கள், பெற்றார்கள். இதற்கு நீங்கள் வாசித்தபடி வேதமும் சாட்சி, சரித்திரமும் சாட்சி. சில சரித்திர சாட்சிகளை வாசியுங்கள்.

  1. BRITANNICA ENCYCLOPAEDIA VOL 3, பக்கம்  82, பக்கம்  365-366
    ஆதி சபைகளில் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மட்டுமே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறது. கத்தோலிக்க சபை தான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்பட ஞானஸ்நானத்தை பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திற்கு மாற்றினார்கள் என்பது சரித்திர ஆதாரம்.
  2. HASTINGS ENCYCLOPAEDIA OF RELIGION, VOLUME 2 பக்கம்  377:
    ஆதி சபைகளில் கிறிஸ்தவ ஞானஸ்நானம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மட்டுமே கொடுக்கப்பட்டது என்று கூறுகிறது.பக்கம்  389: ஜஸ்டின் மார்டிர் காலம் வரை (கி.பி. 100-165) ஞானஸ்நானம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மட்டுமே கொடுக்கப்பட்டது என்று கூறுகிறது.
  3. CANNEY ENCYCLOPAEDIA OF RELIGION, பக்கம் 532
    ஆம் நூற்றாண்டில் திருத்துவ உபதேசம் வளர்ச்சி அடையும் வரை ஆதி சபைகளில் எல்லா ஞானஸ்நானமும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மட்டுமே கொடுக்கப்பட்டது.

இன்னும் பல சரித்திர சாட்சிகள் உண்டு. தயவுசெய்து இணையதளத்தில் இதைத் தேடி கண்டுகொள்ளுங்கள்.

அப்படியானால், இந்த உண்மையான ஞானஸ்நான முறையை மாற்றியது யார்?

கத்தோலிக்க மார்க்கமே!

கி.பி. 3ஆம் ஆண்டு நூற்றாண்டில் உருவான கத்தோலிக்க மார்க்கம் தான் பிதா குமாரன் பரிசுத்த ஆவி மூன்று நபர்களாய் இருக்கிறார்கள் என்ற போதனையையும், இதன் அடிப்படையில் திரியேகம் (TRINITY) என்ற வேதத்தில் இல்லாத வார்த்தையையும் கொண்டு வந்தார்கள்.

இதன் அடிப்படையில்தான் பிதா குமாரன் பரிசுத்த ஆவி மூவராய் இருக்கிறார்கள் என்று விசுவாசித்து, தேவன் கொடுத்த வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல், எந்த இரட்சிப்பும், வல்லமையும் இல்லாத பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்ற அவரது பட்ட பெயர்களில் (TITLES) ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தனர்.

CATHOLIC ENCYCLOPAEDIA 1913, VOL 2, PAGE 263
கத்தோலிக்கர்களாகிய நாங்கள்தான், இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கொடுத்த ஞானஸ்நானத்தை, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் கொடுக்க மாற்றினோம் என்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.

ரோமன் கத்தோலிக்கம் (RC) என்ற ஒரு புதிய மார்க்கத்தையும் உருவாக்கினார்கள். இதை அவர்களே தங்கள் Encyclopaedia வில் குறிப்பிடுவதை வாசித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கண்கள் திறக்கப்பட்டு இந்த உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.

4.7 3 votes
Article Rating

Leave a Reply: Read well and be slow to speak

0 Comments